தமிழக மாணவர் வழிகாட்டி, தேர்வு நோக்கில் அரசியலமைப்பு குறிப்புகள் பஞ்சாயத்துக்களின் அமைப்பு'

73 வது மற்றும் 74வது அரசியலமைப்புத் திருத்தச் 'சட்டம் (1992)ன் படி Part IX மற்றும் Part IXA ஆகிய இரு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 


 இவற்றின்படி ஷரத்துக்களையும், 11 மற்றும் 12 ஆகிய இரண்டு அட்டவணைகளையும் (Schedules) நகர் நாம் பெற்றிருக்கிறோம். 


73வது திருத்தச் சட்டம் பஞ்சாயத்துக்களுக்கும், 74 வது திருத்தச் சட்டம் நகராட்சிகளுக்கும் (நகர்பாலிகா Nagarpalika) அரசியலமைப்பு ரீதியான அங்கீகாரம் வழங்குகின்றன.


ஒவ்வொரு மாநிலத்திலும் கிராம, மாவட்ட அளவிலும், இவற்றுக்கு இடைப்பட்ட அளவிலும் பஞ் சாயத்துக்கள் நிறுவப்பட வேண்டும். 


20 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை உறுப்பினர்களின் கொண்ட மாநிலமாக இருந்தால் இடைப்பட்ட நிலையிலான பஞ்சாயத்து அமைப்பு தேவையில்லை.


ஒரு பஞ்சாயத்து கலைக்கப்பட்டால், 6 மாதங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.


எல்லா பஞ்சாயத்துக்களிலும், பெண்கள், உள்ளதுதாழ்த்தப்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.


ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் சொந்த வரவு செலவுத் திட்டம், வரிவிதிப்பு அதிகாரங்கள் மற்றும் அதன் அதிகார எல்லைக்குள் அடங்கக்கூடிய விஷயங்கள் உண்டு.


அந்தந்தப் பகுதிக்குள் தேவையான வளர்ச்சித்திட்டங்கள் போடவும், செயல்படுத்தவும் இயலும்.


பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தேர்தல் ஆணையர் ஒருவர் இருப்பார்.


பஞ்சாயத்துக்களின் பொருளாதார நிலையைப்பற்றிக் கவனிக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில நிதி ஆணையம் (State Finance Commission) அமைக்கப்படும்.


அதே போல் 74வது திருத்தச் சட்டத்தின்படி நகர் பாலிகா மற்றும் நகர பஞ்சாயத்துக்கள் அமைக்க வகை செய்யப்பட்டது.


இட ஒதுக்கீடு, தேர்தல், வரிவிதிப்பு அதிகாரம், வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளல், நிதி ஆணையம் அமைத்தல் போன்ற அனைத்தும் நகர பஞ்சாயத்துக்கான 74வது திருத்தச் சட்டத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


பஞ்சாயத்துக்களின் அமைப்பு முறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. பஞ்சாயத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ஐந்து முதல் ஒன்று வரை அமைந்திருக்கிறது.


உத்திரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 முதல் 31 வரை அமைக்கப்பட்டுள்ளது.


ஒரிசாவில் அதிகபட்ச எண்ணிக்கை 25 வரை உள்ளது. மற்ற மாநிலங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 முதல் 15 வரை உள்ளன. இந்த எண்ணிக்கை பஞ்சாயத்துக்களின் அளவைப் பொறுத்து அமைந்திருக்கிறது.


சில மாநிலங்களில் பஞ்சாயத்து உறுப்பினர் இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், மலை சாதியினருக்கும், பெண்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.


இந்த இடங்கள் கூட்டு முறையில் நிரப்பப்படுகின்றன. பஞ்சாயத்துக்களின் தலைவர்கள் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்படுவர்.


தமிழகத்தில் பஞ்சாயத்துத் தலைவர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.


Popular posts
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் தனது ஒரு ஆண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு
Image
தீ வைக்கப்பட்டு உயிரிழந்த ஜெயஸ்ரீயின் பொற்றோரிடம் ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் வழங்கினார்
Image
விமான சேவை தொடங்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது
Image
கொரோனா ஊரடங்கால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை
Image
ஒரு கிராமத்தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - தாயம் விளையாடியதால் நேரிட்ட பரிதாபம்
Image