பொதுத்தேர்வு : "ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் தேர்வெழுத நிரந்தர தடை" - அரசு தேர்வுகள் துறை எச்சரிக்கை

இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வுக்கூடத்தில், மாணவர்கள் தாமாகவே முன்வந்து காப்பி எடுப்பதற்காக கொண்டுவந்த துண்டுச்சீட்டு, புத்தகம் போன்றவற்றை ஒப்படைத்தால், தேர்வுக்கூட கண்காணிப்பாளரின் எச்சரிக்கையுடன் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், காப்பி அடித்தல், விடைத்தாளை மாற்றி எழுதுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிடிபடும் மாணவர்கள், தேர்வு கூடத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள அரசு தேர்வுகள் துறை, ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால், நிரந்தரமாக தேர்வு எழுதுவதிலிருந்து தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.


 மேலும், தவறுகளில் ஈடுபடுவோர்  மீது எடுக்கப்படும்16 வகையான நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


 


Popular posts
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் தனது ஒரு ஆண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு
Image
தீ வைக்கப்பட்டு உயிரிழந்த ஜெயஸ்ரீயின் பொற்றோரிடம் ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் வழங்கினார்
Image
விமான சேவை தொடங்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது
Image
கொரோனா ஊரடங்கால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை
Image
ஒரு கிராமத்தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - தாயம் விளையாடியதால் நேரிட்ட பரிதாபம்
Image