குரூப்-1 தேர்வில் முறைகேடு : உயர் பதவிகளை வகித்து வரும் 60 பேர் மீது வழக்கு - பணியாளர் தேர்வாணைய முடிவால் அதிகாரிகள் கலக்கம்

2015 ஆம் ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


இந்த வழக்கில் பதிலளித்துள்ள பணியாளர் தேர்வாணையம்,  முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  


இது தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்களில்,


மொத்தம் உள்ள 75 காலி பணியிடங்களில், சென்னையில் 2 மையங்களில் இருந்து 60 க்கும் மேற்பட்டோர் தேர்வாகியுள்ளனர். 


இவர்கள், டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். 


இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


 இதையடுத்து உயர் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Popular posts
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் தனது ஒரு ஆண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு
Image
தீ வைக்கப்பட்டு உயிரிழந்த ஜெயஸ்ரீயின் பொற்றோரிடம் ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் வழங்கினார்
Image
விமான சேவை தொடங்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது
Image
கொரோனா ஊரடங்கால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை
Image
ஒரு கிராமத்தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - தாயம் விளையாடியதால் நேரிட்ட பரிதாபம்
Image