மனித சமுதாய வளர்ச்சியில் கல்விக்கு என்று சிறப்பான இடம் உண்டு.ஏராளமான கல்வி திட்டங்கள், பயிற்சிக் கல்லூரிகளும் மிகுந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என, மாணவர்களும் பெற்றோர்களும் தவிப்பது கண்கூடு.
பள்ளி முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைப்பவர்கள், புதிதாக பள்ளியில் சேர்க்கின்றார்கள், மற்றும் பொறியியல் , கணிப்பொறி, அறிவியல், கலை, எலெக்ட்ரிக்ஸ், மருத்துவம் உள்பட அனைத்துத் துறை சார்ந்த மாணவர்களுக்கும் தேவையான தகவல் அடங்கிய வழிகாட்டியாக தமிழக மாணவர் வழிகாட்டி மாத இதழ் வெளியாகிறது.
கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் என இலட்சக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படிக்கும் மாத இதழ் தமிழக மாணவர் வழிகாட்டி. சென்னை முதல் குமரி வரை சென்றடைகிறது.
அதிகப்படியான வாசர்கள் படிக்கும் தமிழக மாணவர் வழிகாட்டி மாத இதழ் தங்களின் கல்வி நிறுவனங்கள் குறித்து செய்திகளையும், விளம்பரங்களையும் இடம் பெறச் செய்து பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.